திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதற்கு நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும். தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது" என தெரிவித்தார்.