தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட்.. சுதீஷ் தகவல்

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 03) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் தேமுதிக தலைமை வேட்பாளரை அறிவித்த பின் வேட்புமனு தாக்கல் செய்வோம். சட்டமன்ற தொகுதி சீட் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி