தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவரிடம் தேமுதிக - திமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “பின்னர் பதிலளிக்கிறேன். சட்டப்பேரவை கூட்டத்திற்கு சென்று திரும்பியதும் பதிலளிக்கிறேன்” என கூறிவிட்டு சென்றுள்ளார். முன்னதாக, அதிமுக உடன் தேமுதிக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
நன்றி: NewsTamilTV24x7