சாதனை படைத்த சின்னர்.. இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கேஸ்பர் ரூட்டுடன் மோதல்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையரில் மழை காரணமாக தாமதமாக தொடங்கிய அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சின்னர் (இத்தாலி) 6– 2,5-7,6-4 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி