தீபாவளி சிறப்பு ரயில்.. முன்பதிவு தொடக்கம்

தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது இரவு 7:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9:20 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, வரும் 9ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து கிளம்பி, மறுநாள் காலை 9:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ஏசி சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பயணிகள் தங்கள் பயணத்தை இப்போதே திட்டமிட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி

✕
✕