தீபாவளி சிறப்பு பஸ்.. அமைச்சர் முக்கிய தகவல்

சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மறைமலை நகர் மற்றும் கிளாம்பாக்கத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு தேவையான விவரங்கள் மாநகரப் பேருந்துகளில் சுவரொட்டிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலின்றி பயணிகள் பாதுகாப்பாகப் பயணிக்கவே இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕