தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக். 30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளைய தினம் முற்பகல் மட்டும் செயல்படும் எனவும், பிற்பகல் அரை நாள் விடுமுறை விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (அக். 31) தீபாவளி பண்டிகையை சிறப்பாக மாணவ, மாணவிகள் கொண்டாட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.