“உங்களது கட்சியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என தவெக தலைவர் விஜயை திமுக நிர்வாகி திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “சேலத்தில் நடந்த விஜயின் மக்கள் சந்திப்பை பார்த்தேன். அப்போது அவர், ‘மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை தேர்தல் அறிக்கையைப் பார்த்து கூறுகிறேன்’ என சொல்லுகிறார். மக்கள் பிரச்னைகளை தெரியாத உங்களுக்கு அவர்கள் எப்படி வாக்கு செலுத்துவார்கள்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
நன்றி: NewsTamilTV24x7