அஜித்குமார் உயிரிழப்பு வழக்கில் புகாரளித்த நிகிதாவின் மோசடி பின்னணி பகீர் கிளப்பியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தனது தாயாருடன் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணத்தை சுருட்டியதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதுமட்டுமின்றி நிகிதாவுக்கு மூன்று முறை திருமணமாகி மூன்று திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு குழந்தை இல்லை எனவும் தெரியவந்துள்ளது.