பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.7 லட்சம் அபராதம்

பொதுப்போக்குவரத்து ஒழுங்கை பராமரிக்கும் வகையில், சிங்கப்பூரில் பேருந்து பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் இந்திய மதிப்பில் ரூ.37,457 முதல் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பேருந்தில் சத்தமாக இசை கேட்பது, உணவு உண்பது, குப்பை கொட்டுவது மற்றும் இருக்கைகளில் கால் வைப்பது போன்ற செயல்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படும். இதற்கென நியமிக்கப்பட்ட சிறப்பு டிக்கெட் பரிசோதகர்களே பயணிகளுக்கு நேரடியாக அபராதம் விதிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕