மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு, தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று நீலகிரி, கோவை, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நண்பகல் 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி.