தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்.30) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி. நாளை மறுதினம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.