தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று (மார்ச் 3) நடைபெறுகிறது.