அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால் நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கியுள்ளன. கோவையில் கொலை வழக்கு ஒன்றில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், அரசின் தவறால் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 8 வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மொத்தம் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.