கரூரில் QR அடங்கிய அடையாள அட்டைகள் விநியோகம்

கரூரில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நாளை (ஜூலை.10) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதற்கான கியூஆர் (QR) கோடுடன் கூடிய அடையாள அட்டைகள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் பங்கேற்கும் வகையில் இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி