தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தவெக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நாளை (பிப்., 06) முதல் தொடங்குகிறது. வரும் 14ஆம் தேதி வரை விருப்பமுள்ளவர்கள் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு அளிப்போரிடம் தவெக தலைவர் விஜய் தனித்தனியாக நேர்காணல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.