தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தற்காலிக மதிப்பெண் பட்டியல் 22.05.2026 முதல் வழங்கப்படும். விடைத்தாள் நகலுக்காக 22.05.2026 முதல் 27.05.2026 வரை விண்ணப்பிக்கலாம். துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 26.05.2026 முதல் 09.06.2026 வரை பெறப்படும். துணைத் தேர்வு 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும். மதிப்பெண் மறுமதிப்பீட்டிற்கு 17.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.