2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை தேமுதிக இன்று (பிப்.6) தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வரும் பிப்.12-ம் தேதி வரை இந்த மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனுக்களை பெற தேமுதிக அலுவலகத்தில் குவிய தொடங்கியுள்ளனர்.