தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு ஜெய் சதீஸ் என்பவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டதால் தமிழக பாரதிய ஜனதா கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. பல்வேறு மாவட்டங்களில் பாஜக தலைவர்கள் நியமனத்தால் கட்சிக்குள் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நெல்லை, ராணிப்பேட்டை, கோவை மாவட்டங்களிலும் கட்சி விதிகளை புறக்கணித்து மாவட்ட தலைவர்கள் நியமனம் நடந்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Courtesy: Spark Media