என்.எல்.சி.யில் பணிநீக்கம்: ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

கடலூர் நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இதுவரை ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் அனுமதி மறுத்ததால் பணி நீக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி

✕
✕