தவெக அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே இடம்பெற முடியும் என்ற சூழலில், அதிமுக அதிருப்தி MLA-க்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போது முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகியவற்றுக்கு தவெக தரப்பில் அமைச்சரவையில் இணைய அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விசிக, இடதுசாரிகளின் எதிர்ப்பு காரணமாக, அதிருப்தி அதிமுக MLA-க்களுக்கு இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன.