மஞ்சள்நிற பஃப்பால் காளான் கண்டுபிடுப்பு

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டம் செதுவா கிராமத்தில், பிரகாசமான மஞ்சள் நிறமும் வட்ட வடிவமும் கொண்ட 'போவிஸ்டா கொலராட்டா' என்ற அரிய வகை பஃப்பால் (Puffball) காளான் கண்டறியப்பட்டுள்ளது. அகாரிகேசி குடும்பத்தைச் சேர்ந்த இப்பூஞ்சை, மூடிய அமைப்பிற்குள் வித்துக்களை உருவாக்கி, வெளிப்புறச் சுவர் வெடிக்கும் போது அவற்றை வெளியிடுகிறது. இது காடுகளில் சிதைவு மற்றும் ஊட்டச்சத்து மறுசுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி