சீனாவின் ஜூராங் உலாவிக் கலத்தின் கண்டுபிடிப்பில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. வண்டல் மண் படிவுகள், பள்ளங்கள் ஆகியவை கடந்த காலத்தில் அங்கு பெரிய நீர்நிலை இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் வெப்பமான வளிமண்டலத்துடன் கூடிய வாழக்கூடிய கிரகமாக இருந்திருக்கலாம் என்ற கோட்பாட்டை ஆதரிக்கிறது. சுமார் 3.42 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த கடல் அழிந்துள்ளதாக தெரிகிறது.