'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'காலம் மாறிப் போச்சு' போன்ற குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் இயக்குநர் வி.சேகர். வடிவேலு, விவேக் உள்ளிட்டோரை கதாநாயகனாக மாற்றி அழகுபார்த்த வி.சேகர், வடிவேலுவின் ஆணவம் காரணமாக அவர் மீது இறுதி நாட்களில் வருத்தமாக இருந்தார். தனது மகன் கார்ல்மார்ஸ்-ஐ வைத்து 'சரவண பொய்கை' என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இறுதி வரை அப்படம் வெளியாகவே இல்லை. மகனை நடிகனாக்க விரும்பிய சேகரின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது.