மாடியில் இருந்து தவறி விழுந்த இயக்குநர் அனிக் தத்தா காலமானார்

புகழ்பெற்ற பெங்காலி இயக்குநர் அனிக் தத்தா, கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று (மே 27) மதியம் காலமானார். கரியாஹாட்டில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. 'பூதேர் பாபிஷ்யத்', 'அபராஜிதோ' போன்ற படங்கள் மூலம் பெங்காலி திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் தத்தா, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் நரேந்திர சந்திர தத்தாவின் பேரன் ஆவார்.

தொடர்புடைய செய்தி