கர்நாடகாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் மாதம் முதல் சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இணைப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.