வேடசந்தூர்: மூதாட்டியிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் வேடசந்தூர் நேருஜிநகர் மல்லிகை தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பழனியப்பன் இவரது மனைவி சிவானந்தம் (68) இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தாலி செயினை அறுத்தார். 

மேலும் காதிலிருந்த கம்மலை காதோடு சேர்த்து பறித்துக்கொண்டு தப்பி ஓடும்போது கம்மலும் தவறி கீழே விழுந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக வேடசந்தூர் குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த மணி மகன் சக்திவேல் (28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி