வேடசந்தூர்: கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

வேடசந்தூர் போலீசார் அய்யர்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போழுது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இளைஞரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் இளைஞர் பெயர் நவீன்குமார் (வயது 24) வி. புதுக்கோட்டை ஊராட்சி மின்னுக்கம்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப் பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்தி