திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், பண்ணை வீட்டில் வசித்து வருபவருமான வீராசாமிநாதனை, அவரைப் பார்க்க வந்த இளைஞர் ஒருவர், பொன்னாடை போர்த்துவது போல் மறைத்து வைத்திருந்த கத்தியால் பின்பக்க புடனியில் ஆழமாகவும், முதுகிலும் மார்பிலும் குத்திவிட்டு தப்பிச் சென்றார். காயமடைந்த வீராசாமிநாதன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.