மேலும் ஐசிசி கமிட்டியை சட்டப்படி ஆலை நிர்வாகம் தான் நடத்த வேண்டும். ஆனால் திவ்வியராகினி தலைமையில் நடைபெற்று வருகிறது இது சட்டவிரோதமான செயலாகும். இதற்கு ஆதாரமாக நாச்சி கார்மெண்ட்ஸ் ஆலையில் ஐசிசி கமிட்டி மினிட் நோட்டை கைப்பற்றி விசாரிக்க வேண்டும். ஆலைக்குள் மீட்டிங் ஹாலில் உள்ள சிசிடிவி கேமரா புட்டேஜ் பரிசோதிக்கப்பட வேண்டும். எனவே இந்த சட்டவிரோதமான பணம் பறிக்கும் கூட்டத்தை ஆலைக்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வெளிநாட்டினர் ஆலைக்குள் வருவதால் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த தொழிலாளர்களையும் தொழிற்சாலைகளையும் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு அதிகாரிகள் ஆலைக்குள் வருகின்ற வெளிநாட்டினரையும் அவர்களின் கைக்கூலி திவ்விய ராகினியையும் ஆலைக்குள் அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.