இந்நிலையில் இந்த திட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் இணைந்து பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் சொந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு வேலை உத்தரவு பெற்று சுமார் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
எனவே இந்த திட்டங்களில் நிதி மோசடி செய்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகுனா மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரரின் புகார் மனுவை பரிசீலித்து சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.