உடனடியாக கிஷோர் கிச்சனின் கதவை பூட்டிவிட்டு வீட்டின் வெளியே சென்று வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான சாமிநாதன், ஜேம்ஸ் பிரபு தாஸ், ராமன், கருப்பு துரை, எட்டையா ஆகிய தீயணைப்பு வீரர்கள் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அரை மணி நேர தேடலுக்குப் பிறகு 5 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பை கருவி மூலம் உயிருடன் பிடித்தனர்.
உயிருடன் பிடித்த கருஞ்சாரை பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காக சாக்கு பையுக்குள் போட்டு கொண்டு சென்றனர்.