வேடசந்தூர்: ஆடு, மாடு மேய்த்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை

வேடசந்தூர் அருகே கருகாம்பட்டி பகுதியில் நூற்பாலை பூட்டப்பட்டுள்ளது. அதன் முன்பாக இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். போதை இளைஞர்கள் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து இளைஞர்களை பிடிக்க முற்பட்ட போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு இளைஞர் கீழே விழுந்து காயமடைந்தார்.

தொடர்புடைய செய்தி