மொத்தமுள்ள 20 ஆடுகளில் 9 ஆடுகள் பலியாகின எட்டு ஆடுகள் காயம் அடைந்தன. இறந்த ஒன்பது ஆடுகளின் மதிப்பு 50,000 எனக் கூறப்படுகிறது. அதே ஊரைச் சேர்ந்த வேலுமணி என்பவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டுக்குட்டியை நாய்கள் கடித்து இழுத்துச் சென்று விட்டது. அதன் மதிப்பு 10,000 என்று கூறப்படுகிறது. அதே போல் நத்தக்காடு பழனிச்சாமி என்பவர் வீட்டின் முன்பாக கட்டி வைத்திருந்த மூன்று குட்டிகளை ஈன்ற ஆட்டை நாய்களால் கடித்து குதறியது. தொடர்ந்து அப்பகுதியில் வெறி நாய்களால் ஆடுகளை வளர்த்து வாழ்வாதாரம் நடத்தி வரும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தரப்பில் எந்த உதவிகளும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெரு நாய்கள் தொல்லையிலிருந்து ஆடு வளர்ப்பவர்களையும், ஆடுகளையும் காக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் வேண்டுகோளாக உள்ளது.