வேடசந்தூர்: தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு ஆரம்ப பள்ளியில் தீயணைப்புப் படையினர் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர். நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் தற்போது வடகிழக்குப் பருவமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறி அவர்களின் பாதுகாப்புடன் சென்று முறையாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். தாங்களாகவே நண்பர்களுடன் சேர்ந்து நீர்நிலைகளில் குளிக்கக்கூடாது என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி