படுஜோராக தயாராகும் பல ரக கார்த்திகை விளக்குகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி பகுதிகளில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு டிசைன்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர். சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி, தட்டு விளக்கு, மொரம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, ஆரத்தி தட்டு விளக்கு, மனை விளக்கு, உருளி விளக்கு, சாமி சிலை வைத்த உருளி விளக்கு, தாமரை விளக்கு போன்ற புதிய டிசைன்களிலும் விளக்குகள் தயாராகி வருகின்றன. வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில விற்பனையாளர்கள் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி