திண்டுக்கல்: பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

திண்டுக்கல் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகளைக் கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த அழகாபுரியைச் சேர்ந்த ரங்கநாதன் மற்றும் இவருடைய சகோதரர் கருப்பசாமி ஆகிய 2 பேரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று (மார்ச் 25) சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி