அப்போது பின்னால் திருச்சி நோக்கி சென்ற மற்றொரு காரும் அந்த காரின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கருப்பையா மற்றும் சந்துரு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்