திண்டுக்கல்: நகை, பணம் ஏமாற்றிய திருநங்கை.. போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், திருநங்கை காசியம்மாள் தன்னை முருங்கைஅரசி என்பவர் ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், திருநங்கை காசியம்மாள் காவல் நிலையத்திற்கு வருவதை அறிந்த திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள், காசியம்மாள் தங்களை ஏமாற்றி நகை, பணம் பறித்ததாகக் கூறி காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி