சின்ன வெங்காயத்தை பின்னுக்கு தள்ளிய பெரிய வெங்காயம்

திண்டுக்கல்லில் உள்ள வெங்காய சந்தையில் தற்பொழுது சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. இதேபோல் வட மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பெரிய வெங்காயம் வரத்து குறைந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி முதல் தரமான பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 65-க்கும், இரண்டாம் தரம் ரூ. 55-க்கும், மூன்றாம் தரம் ரூ. 45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளையில் சின்ன வெங்காயம் முதல் தரம் 45 ரூபாய்க்கு, இரண்டாம் 35 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயத்தைவிட பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி