இதனைக் கண்ட அவரது பக்கத்து வீட்டின் கார் டிரைவர் ராஜா (35) என்பவர் இதுகுறித்து பிரபுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் இன்ஸ்பெக்டர் பிரபு வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் வைத்திருந்த வைர நெக்லஸ் மற்றும் ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு உள்ளிட்ட 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!