வடமதுரையில் பரபரப்பு.. சிறுவன் உட்பட 10 பேர் கைது

வடமதுரையில் உள்ள மனமகிழ் மன்றத்தில் புகுந்து சூறையாடி, ரூ. 62 ஆயிரம் பணம் பறித்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. பவித்ரா மேற்பார்வையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 3 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி