இந்த போட்டிகளில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள நத்தம், வேடசந்தூர், திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, கொடைக்கானல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் இந்தப் போட்டிகள் சப்சீனியர் , பிரிவுகளின் கீழ் பூம் சே, குறுக்கி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகள் சப் சீனியர்கள் 11 பிரிவின் கீழும் சீனியர்கள் 8 பிரிவின் கீழும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவின் கீழ் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து திருச்சியில் நடைபெற இருக்கின்ற மாநில அளவிலான தேக் வோண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெரும் வீரர், வீராங்கனைக்கு பதக்கங்கள், சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.