திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குஜிலியம்பாறை வட்டம் குழந்தைகவுண்டன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் 2 மாதங்களாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக கூறி காலி குடங்களுடன் வந்து மனு அளித்தனர். பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.