திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சார் பதிவாளர் மாற்றப்படுவதால் பத்திர எழுத்தர்களும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் மாவட்ட பதிவாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் இன்று வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.