திண்டுக்கல் மாவட்டம், எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. இதனால், எரியோடு, நாகையக்கோட்டை, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.