மேலும் பூசாரி மட்டுமே வைத்திருக்க வேண்டிய கோயில் சாவியை, 8 குடும்பத்தினருக்கும் தரும்படி தெரிவித்து வருகிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள சாலையில் அமர்ந்தனர். உடனடியாக அங்கு காவலில் இருந்த காவலர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே 20 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தையில், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
20 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியலால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே அமைந்துள்ள திண்டுக்கல்-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.