இந்த பள்ளியில் இப்பகுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சேர்ந்த மாணவர், மாணவியர்கள் 45 பேர் கல்வி பயின்று வருகின்ற சூழ்நிலையில் பள்ளிக் கட்டிடம் ஆனது சிதிலம் அடைந்து இடிந்து விழும் சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் அந்தக் கட்டிடத்தை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை இடிக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர் மாணவியர்கள் தனியார் கட்டிடத்தில் பயிலக்கூடிய சூழ்நிலையில் கழிவறை குடிநீர் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி சுகாதாரக் குறைவில் பயின்று வருவதால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.
எனவே குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை கட்டித் தரவேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி புகார் மனு அளித்தனர். பள்ளிக் கட்டிடத்தை கட்டித் தரக் கூறி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.