திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளி மோகன் (40), அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த மழை நீரில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மோகனின் உடலை மீட்டனர். எரியோடு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.