தாடிக்கொம்பு அருகே மறவபட்டியைச் சேர்ந்த 55 வயதான கூலித்தொழிலாளி முனியப்பன், பக்கத்து வீட்டுத் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.